சர்காரில் கிளாஸ் லுக்கில் மாஸ் காட்டும் தளபதி ‘விஜய்’

சர்கார் படத்தின் புதிய போஸ்டரை, சன்பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய், துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி வரும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியான நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் சிம்டாங்காரன் சிங்கிள் டிராக் கடந்த சில தினங்களுக்கு முன் யூடியுப்பில், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ள இப்பாடலை இதுவரை 1.2 கோடி பேர் யூடியுப்பில் பார்த்து ரசித்துள்ளனர்.

கிளாஸ் லுக்கில் மாஸ் காட்டும் தளபதி ‘விஜய்’X
இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளதாக, மோஷன் டீசரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. சிம்டாங்காரன் பாடல் பெரிதாக வெற்றி பெறாததால், இந்த போஸ்டர் எப்படி இருக்கும் என தளபதி விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

The much awaited NEW POSTER of #Sarkar is out. Get ready for #SarkarKondattam. Audio from October 2nd. @actorvijay… https://t.co/M18fGBl7vm— Sun Pictures (@sunpictures) 1538224200000
இந்நிலையில், அந்த போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், விஜய் புளு கோட் சூட்டில், செம்ம கிளாசாக இருக்கிறார். பக்கா பிஸினஸ்மேன்னாக விஜய்யின் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், இந்த போஸ்டரில் அக்.2 ஆம் தேதி சர்கார் ஆடியோ வெளியீடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*