என்னதான் ஆச்சு., மதுரவாயல் – துறைமுகம் திட்டம்.! விரைவில் பணி தொடங்குமா?.!! 

சென்னை துறைமுகத்துக்கு வரும் கனரக வாகனகள் சரக்குகளை ஏற்றி செல்லவும், வரவும் எளிதாக இருக்கும் வகையில் விரைவு சேவைக்காக மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் துறையின் கீழ் இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.  மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான 18 கி.மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கப்பட ரூ.3 ஆயிரம் கோடி செலவில் 6 வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசாங்கமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக கடற்படை நிலம் ஒதுக்கீடு செய்வதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பிரச்சனை நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பின் நிலம் ஒதுக்கீடு செய்வது முடிவாகிவிட்டது. பேச்சுவார்த்தை நல்ல படியாக முடிந்துள்ளதால் இந்த பணிகளை விரைவில் தொடங்க நெடுஞ்சாலை துறையினர் அதிக ஈடுபாடுடன் தயாராகியுள்ளார். மதுரவாயலில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் கூவம் ஆற்றுப் பாதை வழியாக சென்னை துறைமுகத்துக்கு பறக்கும் சாலை வழித்தடப் பாதை விரைவில் அமைக்கப்பட உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*