எம்ஜிஆர் விழாவில் கலந்துகொள்ள முடியாதது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

சென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க முடியாததற்கான காரணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறறார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது. இதற்கு மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதில் பங்கேற்க முடியாது என்பதற்கான காரணத்தை அவர் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.

அதில், “விழா அழைப்பிதழில் எதிர்க்கட்சியான திமுகவின் தலைவர் என்ற முறையில் என் பெயரை இடம்பெற செய்திருக்கும் அரசியல் பண்பாட்டை மதிக்கிறேன்.” என்று கூறியுய்ள்ளார்.

“அதே வேளையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் எம்.ஜி.ஆரின் அருமை பெருமைகளை பரப்புவதை விட திமுகவையும், கருணாநிதியையும் கடுமையாக விமர்சிப்பதையே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் முதன்மை இலக்காக கொண்டிருந்தனர்” எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழாவின் பின்னணியையும் உள்நோக்கத்தையும் புரிந்துகொண்டதால் அதில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என முடிவுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும் லாப நோக்கத்துடனும் எம்ஜிஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் கூறிய அவர், எம்.ஜி.ஆர் தொடர்பாக முரசொலியில் உங்களில் ஒருவன் பகுதியிலும் அரசு சார்பிலான நூற்றாண்டு மலரிலும் தான் கட்டுரை எழுதியிருப்பதையும் தனது அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளார்.

கருணாநிதி – எம்.ஜி.ஆரின் நட்பு அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது. அதை அரசியலாக்காமல் நாளைய விழாவை எம்ஜிஆர் புகழ்பாடும் விழாவாக கொண்டாடவும் அரசை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*