காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி, கழுத்தை அறுத்துகொண்ட காதலன்!

திருமணம் செய்த நிலையில்,பாதுகாப்பிற்காக காவல்நிலையத்திற்கு வந்த ஜோடியை, போலீசார் பிரிக்க முயன்றதால், மனமுடைந்த காதலன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள  ராமானுஜர் நகரை சேர்ந்தவர்   கோபிநாத்.இவர் சேலத்தில் உள்ள தனியார் பேக்டரி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.மேலும் இவர்  ஈரோடு தனியார் கல்லூரியில் படித்து வரும் கரூர் பாரதி நகரை சேர்ந்த கோபிகா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கோவிலில் இருவரும் திருமண செய்து கொண்டனர்.பின்னர் தங்களது பாதுகாப்பிற்காக நேற்று மாலை கரூர் காவல்நிலையத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

ஆனால், அப்பெண் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினர் என்பதால், காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ் பெண்ணை விட்டு ஓடி விடு.. இல்லையேல், பொய் வழக்கில் உன்னை சிறைக்கு அனுப்பி விடுவேன் என கோபிநாத்தை மிரட்டியுள்ளார். மேலும் அந்த பெண்ணை பிரித்து அவரின் குடும்பத்தினருடன் அனுப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது .இந்நிலையில் தனது காதலி கோபிகாவினை பிரித்து அழைத்து  மனமுடைந்த கோபிநாத் காவல்நிலையத்திலேயே கத்தியை எடுத்து கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.பின்னர் அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இந்த நிலையில் கோபிநாத், தானும் தனது மனைவியும் பாதுகாப்புக்காக கரூர் நகர காவல்நிலையத்திற்கு வந்ததாகவும்,அங்கு கரூர் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பேகிச்சை கேட்டு காவல்துறையினர் எங்களை பிரித்து வைத்துள்ளதாகவும், மேலும் எங்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு முழுக் காரணம் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் பிரித்திவிராஜ் ஆகியோரும்தான் என்று கூறி வாக்குமூலம் அளித்துள்ளார்.  இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இச்சம்பவம் இப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*