கள்ளக் காதலில் ஈடுபடும் பெண்கள், கொலைகாரிகளாக மாறக் காரணம் என்ன?

கள்ளக் காதலில் ஈடுபடும் பெண்கள், கொலைகாரிகளாக மாறக் காரணம் என்ன? அதிர்ச்சி அளிக்கும் உளவியல் விளக்கம்….!கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக, திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த வனிதா என்ற இளம் பெண், தனது கள்ளக் காதலுக்கு இடையூராக இருப்பதாக கருதி, தான் பெற்ற 3 மாத குழந்தையின் கழுத்தை, கோழியை அறுப்பது போல், கொஞ்சம் கூட கலங்காமல் அறுத்தார்.

நாடே, இந்தக் கொடுமையைக் கண்டு விக்கித்துப் போனது. அதன் தாக்கம் மறைவதற்குள், குன்றத்துாரைச் சேர்ந்த அபிராமி, தன் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு, அதைப் பற்றி எந்த மன உறுத்தலும் இல்லாமல், தன் கள்ளக் காதலனைத் தேடிச் சென்று, இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, சில உளவியல் வல்லுநர்கள் கூறிய கருத்துக்கள் அதிரச்சி அளிப்பதாக இருக்கிறது.ஆண் என்பவன், இந்த சமுதாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பாலினம். அதை சாதகமாக்கிக் கொண்டு, பலர், மலர் விட்டு மலர் தாவும் வண்டாக, கிடைக்கும் பெண்களை எல்லாம் தங்களது காம வலையில் வீழ்த்துகிறார்கள்.

சாதாரணமாக, இந்த மாதிரி கள்ளக் காதலர்ககளின் வெளிப்பாடு, கட்டுப்பாடற்ற காமம் தான். இந்த மாதிரியான காமம், போதையை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது.அந்த மாதிரி, தவறுதலாக, உறவின், தொடர்ச்சியான காமக் களியாட்டங்கள், அதில் ஈடுபடும் பெண்ணின் முழுக் கவனமும், அந்தக் காமத்தில் மட்டுமே, லயித்து விடுகிறது. வேறு எந்த சிந்தனையும் அவர்களுக்கு இல்லாதபடிக்கு, அந்தக் கள்ளக் காதல் செய்து விடுகிறது.

இந்த மாதிரியான மோசமான காமத்திற்கு அடிமையாகும் பெண்கள், தன் கள்ளக் காதலர்களின் கைப் பாவையாக மாறி விடுகிறார்கள்.இதற்கு இடையூராக யார் இருந்தாலும், அவர்களை, ஒரு உயிராகக் கூட அவர்கள் நினைப்பதில்லை. அந்த அளவிற்கு, அந்தக் காதலன் அவளை மூளைச் சலவை செய்து விடுவான். அந்தக் காமமும், அவர்களுக்கு, மூளையை மழுங்கச் செய்து விடும், மிகப் பெரிய போதையாக மாறி விடுகிறது.அதனால், ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்க கூட, அவர்கள் மூளை அனுமதிப்பதில்லை. விவகாரம் முற்றி, சிறைக்குச் சென்ற பின்னர் தான், தன் நிலை உணர்கிறார்கள்.

எனவே, ஆயிரம் மடங்கு போதையான, இந்தக் கள்ளக் காதல் மோகம், முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.உடல் உறவு என்பது, வாழ்வில் ஊறுகாய் போல. சாப்பாட்டுக்கு ஊறுகாயைத் தொட்டுக் கொள்ளலாம். அந்த ஊறுகாயே உணவாகாது!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*