பெட்ரோல், டீசல் விலை  லிட்டருக்கு தலா  ரூ.1 குறைக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதே போல டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் தான் என்று கூறி காங்கிரஸ் கட்சி தலைமையில் நேற்று நாடு முழுவதும் பாரத் பந்த் என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. We have decided to reduce the price of both petrol and diesel by Re 1: West Bengal Chief Minister Mamata Banerjee pic.twitter.com/8IWhK9Hv2e— ANI (@ANI) September 11, 2018 இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை  லிட்டருக்கு தலா  ரூ.1 குறைக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மேற்குவங்க  முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது”,  பெட்ரோல், டீசல் விலை  உயர்வால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே   பெட்ரோல், டீசல் விலையின் மீது லிட்டருக்கு 1 ரூபாய் குறைக்க திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*