குழந்தைகளுக்காக சம்பளம் வாங்காத சிவகார்த்திகேயன்!

5 நிமிடங்கள் ஓடும் குறும்படமான மோதி விளையாடு பாப்பா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

ராகினி முரளிதரன் என்பவரின் தொண்டு நிறுனம் குழந்தைகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. தற்போது இந்த தொண்டு நிறுவம்குறும்படம் எடுக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது. இத்துடன் அரசி மற்றும் அருள் தொண்டு நிறுவனங்கள் இணைந்துள்ளன.

இதுதொடர்பாக ராகினி முரளிதரன் கூறுகையில்’பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சென்னை பாதுகாப்பான இடம் என்றுதான் அனவரும் நினைத்தோம். ஆனால் சமீப காலங்களில் நடைபெற்று சம்பவங்கள் இதை பொய்யாக்கி உள்ளது.

அதனால்இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்தோம். இதுதொடர்பாக என் கணவர்களிடத்தில் பேசினோம். மேலும் கதை எப்படி வர வேண்டும்என்றும்இதில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போதுதான் இந்த படத்தில் நடிகர் சிவகாத்திகேயனை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவரிடம் பேசினோம். அவர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்’’ என்று கூறினார்.

இந்த குறும்படத்தில்40 பள்ளி மாணவர்கள் நடித்துள்ளனர். இந்த திரைபடத்தில் சிவகார்த்திகேயன் உட்பட அனைவரும் சம்பளம் பெறாமல் வேலை செய்துள்ளனர். கூடிய விரைவில் இணையதளத்தில் இந்த குறும்படம் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*