”சோபியா விவகாரம்” வழக்கை திரும்ப பெறமாட்டேன்., தமிழிசை பரபரப்பு பேட்டி.!!

நேற்று சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக மருத்துவ மாணவி சோபியா கோஷமிட்டதால் போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறையில் அடைத்தனர். இந்த விடயம் தற்போது சமூக வலைத்தளத்தில் விவாதமாக மாறி வருகிறது.

திருநெல்வேலியில் நடைபெறும் பாஜகவின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழிசை சவுந்தராஜன் நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணித்தார். அப்போது திடீரென விமானத்தில் பயணித்த மருத்துவ மாணவி சோபியா, தமிழிசையை கண்டதும் பாசிச பாஜக ஆட்சி ஒழிக., பாசிச பாஜக ஆட்சி ஒழிக., என்று பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டார்.பின் விமானம் தூத்துக்குடி விமான நிலைய வந்ததும், இந்த விடயம் குறித்து தமிழிசை அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், விமான காவல்நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன், தமக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சோபியா மீது புகார் அளித்தார்.இதனையடுத்து, புதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் சோபியா என்ற பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி, சோபியா மீது 290, 505 என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை போலீசார் அவரை கைது செய்தனர். பின் அவரை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சோபியாவை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.சோபியா தரப்பில் அவருக்கு ஜாமீன் கேட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி தமிழ் செல்வி, சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை இந்த சமன்பாவம் குறித்து விளக்கமளித்துள்ளார், “நான் சென்ற தூத்துக்குடி விமானம் தரையிறங்கிய போது விமானத்திற்குள்ளேயே என்னை நோக்கி ‘பாஜக பாசிச ஆட்சி ஒழிக ‘ என அந்த மாணவி முழக்கமிட்டார். ஆனால் நான் நாகரிகமும், மற்ற பயணிகளின் பாதுகாப்பு கருதியும் விமானத்திற்குள் எந்த விவாதமும் செய்யவில்லை. 

விமான வரவேற்பறைக்கு வந்த பின் விமானத்திற்குள் கோஷம் போடுவது சரியா என்று அந்த மாணவியிடம் நான் கேட்டதற்கு, அவர் ‘எனது பேச்சுரிமை நான் செய்வேன்’ என்றார். நன் அப்போதும் அமைதியை இழக்காமல் விமானத்திற்குள் இப்படி நடப்பது தவறு என்று, அவர் கோஷமிட்ட முறை, சொன்ன வார்த்தைகளால் அவர் பிண்னணியில் இயக்கம் ஏதாவது இருக்கும் என்ற சந்தேகித்தால், நான் அவர்மீது விமான காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர் கூறுவது போல் பேச்சுரிமைக்கு என்று ஒரு தளம், இடம் உள்ளது. அதை விடுத்து பொது இடத்தில் இதுபோன்று மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக விமானத்தில் கோஷம் எழுப்பினால், அவர்கள் சும்மா விடுவார்களா?.,

அந்த மாணவி பாஜகவுக்கு எதிராக முழக்கமிடப்போகிறேன் என முன்கூட்டியே அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் திட்டமிட்டே பாஜக ஆட்சிக்கு எதிராக பேசியுள்ளார். எனவே சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற மாட்டேன்” என்று தமிழிசை தெரிவித்து உள்ளார்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *