அடுத்த மாதம் திருமணம்! விபத்தில் அகால மரணமடைந்த தமிழக வீரர்! சோகத்தில் குடும்பத்தினர்!

தேனி மாவட்டம்  கருவேல்நாயக்கன்பட்டியில் தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தமிழக கபடி வீரர் சுந்தரமகாலிங்கம் மரணமடைந்துள்ளார். தேனி மாவட்டம் சின்ன ஒபலாபுரம் பகுதியை சார்ந்தவர் சுந்தரமகாலிங்கம். இவர் கபடி விளையாட்டு வீரர். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இன்று அவர் விபத்தில் தன் உயிரை இழந்துள்ளார். அவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தலைகவசம் அணிந்தும் சென்றுள்ளார். இருப்பினும் அவர் துரதிஷ்டவசமாக பலியாகியுள்ளார்.  அவர் இறந்த செய்தியை கேட்ட மணமகள் கதறி அழுதுள்ளார். மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள். இவர் இந்தியாவில் பிரபலமாக நடந்து வரும் ப்ரோ கபாடியில் விளையாடியுள்ளார். 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*