நாளை கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும்..!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதன் மீது பல்வேறு வரிகள் போடப்படுவதால் பெட்ரோல் டீசல் விலை பல மடங்கு உயர்ந்து கொண்டேவருகிறது. இதன் காரணமாக அத்தியாசியா பொருள்களின் விலை பலமடங்கு உயரும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதில் எல்லளவு சந்தேகமில்லை. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை கட்டுபடுத்தகோரி காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் பந்த் அறிவித்தது. நாளை (செப்.,10 ஆம் தேதி) நாடு முழுவதும் முழு அடைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் அழைப்பு விடுத்துள்ளார்இந்த போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் திமுக, பாமக உள்ளிட்ட 16 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுக இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும் வணிக சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நாளை தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் இயங்காது என தமிழ்நாடு ஆட்டோ சங்கம் அறிவித்துள்ளது.நாளை தமிழகத்தில் பாரத் பந்த் நடந்தாலும் வழக்கம்போல் பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி அறிவித்துள்ளார். அதேபோல்,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நாளை நடக்கும் பந்த்திற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், மற்றொரு சங்கமான தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அமைப்பு “நாளை கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும்” என்று தெரிவித்துள்ளார். 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*