நாளை நடக்கவிருக்கும் முழு அடைப்பு போராட்டம்!. மத்திய அரசுக்கு எதிராக கிளம்பும் பிறக்காட்சிகள்!.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை 10.09.20018 அன்று முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்து உள்ளது. இதில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பங்கேற்கின்றனர்.பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இதுவரை பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்துவருவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.இந்த முழு அடைப்பு போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குளுவாக அமைக்கவுள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க., முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் அழைத்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு  ஒத்துழைப்பு கொடுத்து  அணைத்து கட்சியினரும், பொதுமக்களும் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கர்நாடகாவிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் முழு அடைப்புக்கு தனது ஆதரவை அறிவித்து உள்ளது. இடதுசாரிக்கட்சிகள், நாளை போராட்டங்களை  நடத்துகின்றன. 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*