இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கேமராவில் சிக்கிய எஸ்.என்.எஸ்.கல்லூரி அதிகாரி!

கோயம்புத்தூரில் எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் மீது இளம்பெண் ஒருவர் தன்னை 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் நிர்வாக இயக்குனராக இருப்பவர் சுப்பிரமணியன் (64). இவர், 23 வயதுடைய இளம்பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இந்த தொல்லை தாங்காமல் சுப்பிரமணியனை வீடியோ ஆதாரத்துடன் காட்டி கொடுக்க வேண்டும் என்று கருதிய அப்பெண், அவருக்கே தெரியாமல், கேமராவை வைத்து ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து, சுப்பிரமணியன் மீது துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அவர் எடுத்துள்ள வீடியோவில், அந்தப் பெண்ணை ஓடி பிடித்து சுப்பிரமணி சில்மிஷம் செய்வது போன்று காட்சி பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, திருவண்ணாமலையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

கல்லூரி ஆசிரியரை டார்ச்சர் செய்த கோவை கல்லூரி நிர்வாகி | Kovai Teacher with correspondent Video

https://www.youtube.com/watch?v=nIEC5gukHUM&feature=youtu.be

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*