காந்தி தற்கொலைக்கு நான் காரணமா? நடிகை நிலானி பரபரப்பு பேட்டி !

உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தற்கொலைக்கு தான் காரணமல்ல என்று நடிகை நிலானி தெரிவித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் மகாபாரதம், தென்றல், பிரியமானவள் ஆகிய தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நிலானி. இவர் தூத்துக்குடி போராட்டத்தின் போது, காவல்துறை உடையில் காவல்துறையினரைப் பற்றி அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. கைதுக்கு பயந்து நிலானி தலைமறைவானார்.

ஆனால் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் உதவி இயக்குநர் லலித் குமார், தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நிலானி புகார் அளித்திருந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காந்தி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து காந்தியும், நிலானியும் நெருக்கமாக இருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரான நிலானி, மனு ஒன்றை அளித்தார்.

அதில், காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல. காந்தியை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன். ஆனால் அவர் குடிபழக்கத்திற்கு அடிமையாகி, என்னிடம் இருந்து அதிக பணம் வாங்கி செலவிட்டு வந்ததால், ஒதுங்கிக் கொண்டேன். என்னைக் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Actress Nilani explained about assistant director Gandhi suicide issue.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*