பிக்பாஸ் நிகழ்ச்சி 100லிருந்து 105ஆக நாட்களாக நீட்டிப்பு!

பிக்பாஸ் சீசன் 2, 100 நாட்களிலிருந்து தற்போது 105 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து திடீரென நடிகை மும்தாஜ் நேற்று திடீரென தானாகவே வெளியேறினார். தமிழ்ப்பெண் தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம் என்று ரித்விகாவுக்கு அறிவுரை கூறிய மும்தாஜ், இந்தி பெண்களான ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவை அனைவரும் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று வீட்டை விட்டு வெளியேறும்போது அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

மும்தாஜ் சென்றதால் தற்போது வீட்டில் 6 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் பாலாஜி மட்டும் ஆண் போட்டியாளர்.

#பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India https://t.co/5rWMYnynI9— Vijay Television (@vijaytelevision) 1537155000000 இந்த நிலையில் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெறவிருப்பதாகவும், அடுத்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறவுள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். அதற்கு அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெறும். இந்தப் போட்டியில் ஜனனி உள்பட 4 பேர் இடம்பெறுவார்கள் என்றும் கமல் தெரிவித்தார்.

இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் 2 பேர் வெளியேற உள்ளனர். அவர்களின் பட்டியல் இன்றோ நாளையோ வெளியாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*