சோபியாவிற்கு ஒரு நியாயம்; ஹெச்.ராஜாவிற்கு இன்னொரு நியாயமா; நெட்டிசன்கள் கொந்தளிப்பு! – tamil

சென்னை: உயர்நீதிமன்றத்தை விமர்சித்த ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நேற்று நடைபெறவிருந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது உயர்நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டிருந்த பாதை வழியே, சிலைகளை கொண்டு செல்லக் கூடாது என்று போலீசார் அறிவுறுத்தினர்.

புதுக்கோட்டையில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தின் போது மேடை அமைக்க அனுமதி வழங்கப்படாததை கண்டித்து பா.ஜ.க. தேசிய செயலா… https://t.co/Ea65REQjSW— Samayam Tamil (@SamayamTamil) 1537032908000
அப்போது குறுக்கிட்ட ஹெச்.ராஜா, நீதிமன்றத்தையும், போலீசாரையும் அவதூறாகப் பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஏராளமான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

விமானத்தில் தவறாக செயல்பட்டவர் மீது போலீஸ் புகாரளித்த தலைவி தன் கட்சிக்காரரின் நடத்தைக்கு என்ன செய்ய போகிறார்? நீ… https://t.co/voR6GoDJoU— Kasturi Shankar (@KasthuriShankar) 1537077608000
மலிவாய் பேசுவதில் H ராஜா அவர்களுக்கே இது ஒரு புதிய மைல் கல் என்றும், நீதிமன்றமும் போலீசும் வேடிக்கை பார்க்க போகிறதா? என்றும் நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

#HRaja Court should be punished severely. He demolished common peoples respects for the Court and police this will… https://t.co/AOOrODMCZw— A.Vimal (@VimalRavishank1) 1537036481000
ஹெச்.ராஜாவை நீதிமன்றம் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும், அவர் நீதிமன்றம் மற்றும் காவல்துறை மீதான சாதாரண மக்களின் நம்பிக்கையை சிதைத்து விட்டார் என்றும் சிலர் கண்டித்துள்ளனர்.

Law minster @rsprasad – You party national secretary #HRaja openly bad mouth police & high court … will you t… https://t.co/OR1CqrXqPN— Srinivas (@rsvas2) 1537033270000
சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்களே, உங்கள் கட்சி தேசிய செயலரின் தவறான பேச்சு குறித்து, நடவடிக்கை எடுப்பீர்களா? சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

@CMOTamilNadu Sir, don’t you think that this will set a bad precedence.?? #HRaja offers to give bribe to Police per… https://t.co/GFu3qPayoE— MUGILAN CHANDRAKUMAR (@Mugilan__C) 1537035228000
தமிழக முதலமைச்சர் பழனிசாமி அவர்களே, இது ஒரு தவறான முன்னுதாரணமாக தெரியவில்லையா? என்று குறிப்பிட்டுள்ளனர்.

#HRaja All are equal before the law. So Mr.@HRajaBJP has to be punished.Even former judge Mr.Karnan was punished fo… https://t.co/YwdwrKVvO4— Anu Joshua (@AnuJoshua1) 1537054453000
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், முன்னாள் நீதிபதி கர்ணனே தண்டிக்கப்பட்டார் என்றும், எனவே ஹெச்.ராஜா மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், உயர்நீதிமன்றமே முன்வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

#HRaja Atrocity�� https://t.co/uDhUW63SeN— டி.தீபக்(D.DEEPAK) (@DEE5pak) 1537076466000
அதேசமயம் வீடியோவில் இருப்பது தனது குரலே இல்லை என்று ஹெச்.ராஜா விளக்கமளித்ததையும் ட்ரோல் செய்துள்ளனர்.

சீருடை அணிந்த காவலர் மேல் தூசு பட்டால் கூட #ரஜினி சார்க்கு புடிக்காது.இந்த #HRaja வேற அது தன் குரலே இல்லன்னுட்டார்.… https://t.co/CHENIxL2JH— KOLAPPA THANDESH (@skthandesh) 1537079226000
ஒருமுறை காவல்துறைக்கு ஆதரவாக பேசிய ரஜினியிடம் இருந்து, ஹெச்.ராஜா தப்பித்துக் கொண்டார் என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.

Netizens made trolls about H Raja abuse speech in Social media.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*