சிவகார்த்திகேயனுக்கு மறக்க முடியாத படமாக அமைந்த சீமராஜா!

கடந்த 13ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படம் 4 நாட்கள் முடிவில் ரூ.22 கோடி வசூல் கொடுத்துள்ளது.

கடந்த 13ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான படம் சீமராஜா. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர சென்னையில் ரூ.3 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் வந்த படங்களின் வசூலை எல்லாம் இப்படம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் நடிப்பில் வந்த கடைசி 5 படங்கள் வாரவிடுமுறை நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை இங்கே பார்ப்போம்.

#SeemaRaja 3 Days UAE-GCC Updates UAE Admits – 24,667 UAE Gross – ₹1.76cr Rest Of GCC Admits – 17k Rest Of GCC Gr… https://t.co/JWs5qK0UyV— Movie Planet (@MoviePlanet8) 1537172060000

சீமராஜா சினிமா விமர்சனம்

சீமராஜா – ரூ.3 கோடி (4 நாட்கள் முடிவில்)

வேலைக்காரன் – ரூ.2.70 கோடி

ரெமோ – ரூ.1.71 கோடி

ரஜினி முருகன் – ரூ.75 லட்சம்

காக்கி சட்டை – ரூ.1.5 கோடி

தமிழகத்தைத் தொடர்ந்து பெங்களூரிலும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால், இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீமராஜாவிற்கு போட்டியாக வந்த சமந்தாவின் யுடர்ன் படம் வார விடுமுறை நாட்களில் ரூ.66.5 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வசூலில் புதிய சாதனைப் படைத்த சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’!!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*