சர்கார் உரிமையை நாங்க வாங்கவில்லை: வால்மார்ட் பிலிம்ஸ்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் கேரளா விநியோக உரிமையை நாங்கள் வாங்கவில்லை என்று ஸ்ரீ சாய்பாபா வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வரும் தீபாவளி பண்டிக்கைக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்ட வகையில் நடக்கயிருக்கிறது.

Sarkar: ஆரம்பமானது சர்கார் கொண்டாட்டம்: வரும் 19ம் தேதி சர்கார் முக்கிய அறிவிப்பு!

#VolmartFilms deny buying the #Sarkar Kerala distribution rights while @sunpictures announce #SarkarKondattam start… https://t.co/7qb4UYx4vu— MovieCrow (@MovieCrow) 1537172190000
இந்த நிலையில், இப்படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம்! படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் சர்கார்கேரளா டுவிட்டர் பக்கத்தில், சர்கார் படத்தின் கேரளா மாநில விநியோக உரிமையை சாய்பாபா வால்மார்ட் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது பொய்யானது தகவல் என்று வால்மார்ட் நிறுவனம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வால்மார்ட் நிறுவனம் கூறுகையில், சர்கார் கேரளா என்ற டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது பொய்யான தகவல் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*