விஜய்க்குப் போட்டியாக அரசியலுக்கு வருகிறாரா காமெடியன் கருணாகரன்?

நடிகர் விஜய்யைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் காமெடி நடிகர் கருணாகரன், மக்கள் என்னை போன்றவர்தான் வேண்டுமென்றால் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக, உச்சத்தில் உள்ள நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் விமர்சித்து, அதன் மூலம் சிலர் விளம்பரம் தேடி வருகின்றனர். அந்த வகையில், காமெடி நடிகராக இருக்கும் கருணாகரனும், அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் அரசியல் பற்றி தெரிவித்தக் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Don’t ask stupid questions kids like am I from@Tamil Nadu .Did i ever ask if sarkar is Tamil title— Karunakaran (@actorkaruna) 1538823841000
Chill more you threaten me it shows your disability to reply me and I am loving it will be back with next ☝️#Gammunu— Karunakaran (@actorkaruna) 1538830777000
இது ஒருபுறம் இருக்க, காமெடி நடிகரான கருணாகரன், தனது ட்விட்டர் பக்கத்தில் நான் விஜய்யை வெறுப்பதாகவும், அவர் கூறும் அறிவுரைகள் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தானா, நடிகர்களுக்கு இல்லையா, உங்கள் ரசிகர்களிடம் பேச வேண்டாம் என கூறுங்கள், அவர்கள் கேட்கிறார்களா என்று பார்ப்போம் என பதிவிட்டார்.

அவரின் இந்தக் கருத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, விஜய் ரசிகர்களுக்கும் கருணாகரனுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் வார்த்தைப் போர் மூண்டது.

Hii I will not enter politics to safeguard me will enter when people need some one like me to safeguard them https://t.co/PRTvdUjMWi— Karunakaran (@actorkaruna) 1538916041000
இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யையும், விஜய் ரசிகர்களையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நடிகர் கருணாகரன், தனது சமீபத்திய ட்வீட்டில், “நான் எனக்காக அரசியலுக்கு வரமாட்டேன். மக்கள் என்னைப் போன்றன் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினால், அரசியலுக்கு வருவேன்,” என தெரிவித்துள்ளார். இதனால், அவரைப் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*