அஜித்தை விமர்சித்த விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை

நடிகர் அஜித், அவரது மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பள்ளி வளாகத்தில் அஜித் நடந்து வருவதைப் பார்த்து, அவரைக் கண்ட பள்ளி ஊழியர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயல்கின்றனர்.

அப்போது அவர்களிடம் பேசும் அஜித், “ஸ்கூலில் ஃபோட்டோ எடுக்கக் கூடாது. தப்பா நினைச்சுக்காதீங்க. நம்ம இன்னொரு நாள் எடுப்போம். நானே சொல்லி அனுப்புறேன். தம்பி அந்த கேமிரா மட்டும் ஆஃப் பண்ணிடுங்க.
அஜித்தை விமர்சித்த விஜய் ரசிகர்களுக்கு நடிகை பதிலடி
வள்ளி மேடம் ரெக்வெஸ்ட் பண்ணிருக்காங்க. நன்றி” என்று கூறியபடி விடைபெறுகிறார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த குணமா சொல்ற குணத்துக்கு தான் தல நீங்கள் எங்க “தல”�� உங்கள கடுப்பேத்தரவங்கள காயப்படுத்தாத உசுப்பேத்தரவங்கள உதா… https://t.co/83lPj3RZ17— Actress Harathi (@harathi_hahaha) 1538812544000
இந்நிலையில் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பிக்பாஸ் ஆர்த்தி, “இந்த குணமா சொல்ற குணத்துக்கு தான் தல நீங்கள் எங்க “தல” உங்கள கடுப்பேத்தரவங்கள காயப்படுத்தாத.

உசுப்பேத்தரவங்கள. உதாசீணப்படுத்தாத குணத்ததாலதான் நீங்க ஜாம் ஜாம்னு இருக்கீங்க. எங்கள் தல ரசிகர்களின் அன்பும் இறைவன் ஆசீர்வாதங்களும் பல கோடி பெருகட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்த்தியின் இந்த ட்வீட்டை விமர்சித்த விஜய் ரசிகர் ஒருவருக்கு பதிலளித்துள்ள ஆர்த்தி, ‘இந்த ட்வீட் புடிக்கலனா கம்முன்னு உம்முனு இருங்க ப்ரோ ப்ளீஸ்’ என்று விஜய் பாணியிலேயே கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*