‘விஸ்வாசம்’ திருவிழா நாளை ஆரம்பம்? Latest Tamil news

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட நிலையில் உள்ளது. இப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படத்தில் அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகிபாபு, ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘விஸ்வாசம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளிவரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என தெரிகிறது. அதை தொடர்ந்து அடிக்கடி விஸ்வாசம் குறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *