தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

#MeToo வைரமுத்து மீதான குற்றசட்டாட்டு அரசியல் ஆதாயத்திற்கானது அல்ல – சின்மயி

Admin - October 12th, 2018

கவிஞா் வைரமுத்து மீதான குற்றச்சாட்டு அரசியல் ஆதாயத்திற்காகவோ, என்னை பிரபலப்படுத்திக் கொள்ளவோ கூறப்பட்டது கிடையாது என்று பாடகி சின்மயி தொிவித்துள்ளாா்.

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற “வீழ மாட்டோம்” நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தங்கியிருந்த அறைக்கு தன்னை தனிமையில் அழைத்தாக பாடகி சின்மயி பகீர் குற்றச்சாட்டை எழுப்பினார். சின்மயியின் குற்றச்சாட்டுக்கு ஆதரவும், எதிா்ப்பும் எழுந்து வருகிறது. மேலும் சின்யியின் குற்றச்சாட்டுக்கு பின்னணியில் அரசியல் ஆதாயம் இருக்கலாம் என்றும் கருத்துகள் எழுந்தன.

இந்நிலையில் சின்மயி தன் மீது எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளாா். அவா் வெளியிட்ட முகநூல் பதிவில் வைரமுத்து மீது தான் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையானவை. இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது குற்றம் சாட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனா். நான் அதுபோன்ற சூழலை எதிா்கொண்ட தருணத்தில் தொழில்நுட்பம் இதுபோன்ற வளா்ச்சியை பெறவில்லை. அன்றைய சூழலில் என்னால் அதை வெளியில் சொல்ல முடியவில்லை.

எனது குற்றச்சாட்டுக்கு பின்னணியில் அரசியல் ஆதாயமோ, தன்னை பிரபலப்படுத்தும் நோக்கிலோ இந்த குற்றச்சாட்டை வெளியிடவில்லை. மேலும் திருமணத்திற்கு ஏன் வைரமுத்துவை அழைத்தீா்கள் என்று பலா் கேட்கின்றனா். நான் தந்தை இல்லாமல் வளா்ந்த பெண். திருமணத்தின் போது மக்கள் தொடா்பு அதிகாாிகளை (PRO) வைத்து தான் அழைப்பிதழ்களை வழங்கினோம் அப்போது அவா்கள் குறிப்பிட்ட முதல் பெயா் வைரமுத்து. வேறு வழியின்றி அவா் அழைக்கப்பட்டாா்.

என்னைப்போன்று மேலும் பல பாடகிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனா். ஆனால், பயம் காரணமாக அவா்கள் புகாா் அளிப்பதில்லை என்று அவா் விளக்கம் அளித்துள்ளாா்.

பாலியல் குற்றச்சாட்டுகள் நியாயமானவையாக இருக்க வேண்டும்: கமல்ஹாசன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு எதிா்ப்பு

Related Posts

ஆதாரம் சேகரிக்கிறேன் புதிய சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீ ரெட்டி!

திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பல பெண்களிடமிருந்து ஆதாரம் திரட்டிக் கொண்டிருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்….


ரஜினி என்னும் மண் குதிரையை பொன் குதிரை என்று பாஜக நினைக்கிறது!

தமிழகத்தில் பிஜேபியின் திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய NDTV பிரணாப் ராய் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி யின் நிறுவனர்களில் ஒருவரும், இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளருமான…


பொள்ளாச்சி விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கும்; அதிமுக கூட்டணி படுதோல்வி!

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்போடு…


பாலியல் குற்றச்சாட்டுகள் நியாயமானவையாக இருக்க வேண்டும்: கமல்ஹாசன்

சென்னை: #MeToo என்று பெண்கள் பதிவிடும் பாலியல் குற்றச்சாட்டுகள் நியாயமானவையாக இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின்…


நடிகர் சண்முகராஜன் மீது கூறிய பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி

பாலியல் புகாரை நடிகை ராணி வாபஸ் பெற்றதால் செங்குன்றம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடிகர் சண்முகராஜன் விடுவிக்கப்பட்டார்….


Tamil News


அண்மை செய்திகள்