பரிதி இளம்வழுதி காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 58.

திமுகவில் இருந்த பரிதி இளம்வழுதி, 1989-2011ம் ஆண்டு வரை எழும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். திமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த அவர், 1996-2001 வரை சட்டப்பேரவை துணை சபாநாயகராகப் அவர் பதவி வகித்துள்ளார். கட்சியில் அவரது வளர்ச்சியை பார்த்த அன்றைய திமுக தலைவர் கருணாநிதி 2006ம் ஆண்டில் செய்தி மற்றும் விளரம்பரத் துறை அமைச்சர் பொறுப்பை வழங்கினார்.

கடந்த 2013ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார். பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவில் இருந்து விலகி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்துகொண்டார். இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக பரிதி இளம்வழுதி இன்று காலை உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பரிதி இளம்வழுதி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*