தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

சென்னை விமான நிலையத்தில் ’நக்கீரன்’ கோபால் கைது!

Admin - October 9th, 2018

ஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பத்திரிக்கை ஆசிரியர் ’நக்கீரன்’ கோபாலை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரத்தில், ஆளுநர் மாளிகை தெரிவித்த புகாரை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து புனே செல்ல விமான நிலையம் வந்த ‘நக்கீரன்’ கோபாலிடம் அங்கு வந்த தனிப்படை போலீசார், விவரங்களை தெரிவித்து கைது செய்தனர். மேலும் தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக அவர் காவல் நிலையம் கொண்டு செல்லப்படுவார் என்று தெரிகிறது.

அங்கு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு , வாக்குமூலம் பெறப்பட்டு, நீதிபதி முன்பு ’நக்கீரன்’ கோபால் சமர்ப்பிக்கப்படுவார். அதை தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் வெளிவந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள ‘நக்கீரன்’ கோபால் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இது தொடர்பான விவரங்களை தனிப்படை போலீசார் விரைவில் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை விமர்சித்து ’நக்கீரன்’ பத்திரிக்கையில் செய்தி வெளிட்ட தொடர்பாக, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாமியார் நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: கஸ்தூரி சர்ச்சை டுவீட்!

வைரமுத்து மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்- விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்

Related Posts

எச்.ராஜா, எஸ்.வி. சேகரை ஏன் காவல் துறை கைது செய்யவில்லை? ஸ்டாலின் சராமாரி கேள்வி

நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கும் தொணியில் பேசியுள்ளார்….


Tamil News


அண்மை செய்திகள்