தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

பட்டைய கிளப்பும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு!!

Admin - October 5th, 2018

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ‘பேட்ட’. இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் நடிகர் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை 7 மணியளவில் வெளியானது.

#PettaSecondLook @rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @DOP_Tirru @sureshsrajan @PeterHeinOffl… https://t.co/wx0ngzw555— Sun Pictures (@sunpictures) 1538659745000
இந்தப் போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த், இதுவரை இல்லாத வகையில் பெரிய மீசையுடன் வேட்டி சட்டையோடு பக்கா மாஸ் கிராமத்து ஆள் போல உள்ளார். இந்தப் போஸ்டரைத் தொடர்ந்து படம் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Superstar Rajinikanth Petta Second Look

‘விஸ்வாசம்’ திருவிழா நாளை ஆரம்பம்? Latest Tamil news

Related Posts

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய பிரபலங்களின் பட்டியல்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிவக்குமார் என்று நடிகர்கள் பலரும் நிதி நிவாரணம்…


காலா படம் எப்படி? உங்களுடைய கருத்து

முதலில் ஒரு அழுத்தமான கதையை தேர்ந்தெடுத்து அதனை உருவாக்கியதற்கு ரஞ்சித்துக்கு பூங்கொத்துகள். ஆம், “நிலமே எங்கள் உரிமை” என ஒடுக்கப்பட்ட…


Rajinikanth’s daughter Soundarya Rajinikanth has decided to end her marriage!

​#Rajinikanth’s daughter #SoundaryaRajinikanth has decided to end her marriage to Chennai-based industrialist #AshwinRamkumar!


ஒரே நாளில் குப்புற விழுந்த ரஜினி! பகிரங்க மன்னிப்பு!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில்…


இந்தியன் படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க வேண்டியதாம்- ஷங்கரே சொன்ன மாஸ் தகவல்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் படம் இந்தியன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளது. இந்நிலையில்…


Tamil News


அண்மை செய்திகள்