இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் மனைவியுடன் தங்கும் விவகாரம்!. கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவு!.

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது, வீரர்கள் தங்கள் மனைவி மற்று காதலியை 2 வாரங்கள் வரை மட்டுமே தங்க தங்கவைத்துக் கொள்ளலாம் என்ற புதிய விதியை இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அமல்படுத்தியது.ஆனால், தொடர் முடிவடையும் வரை மனைவி மற்றும் குடும்பத்தினர் தங்க அனுமதிக்க வேண்டும் என்று வீரர்கள் சார்பில் கேப்டன் விராட் கோலி கோரிக்கை வைத்திருந்தார்.ஆனால் கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி அதிகாரி கூறுகையில், விராட் கோலி கோரிக்கை வைத்திருப்பது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த விதியை தான் கடைபிடிக்க வேண்டும்.இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த விதிமுறையில் தற்போது எந்த மாற்றமும் இல்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வான பிறகு அவர்களின் முடிவுக்கு விட்டுவிட இருக்கிறோம் என கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*