விஸ்வாசம் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல இசை நிறுவனம்!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல இசை நிறுவனமான லஹரி கைப்பற்றியுள்ளது.

அஜித் – சிவா கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் பொங்கல் விடுமுறையில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர், இசை வெளியீடு, டிரைலர் ஆகியவை அடுத்தடுத்த சில நாட்களில் வெளிவரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

#Viswasam audio rights bagged by south India’s leading music label @LahariMusic. https://t.co/jeevhwaRj1— Sreedhar Pillai (@sri50) 1543903488000
இந்த நிலையில் இந்த படத்தில் முதல்முறையாக அஜித்துடன் டி.இமான் இணைந்துள்ளதால் ஆடியோ உரிமைக்கு பெரும் போட்டி இருந்தது. கடைசியில் ‘லஹரி’ நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு ஆடியோ உரிமையை பெற்றுள்ளது. படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் காமெடி நடிகர்கள் தம்பி ராமையா, விவேக், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*