’தல’ அஜித்திற்காக பணத்தை கிழித்து எறிந்த ரசிகர்! வைரலாகி வருகிறது

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. இதில் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலை ஒட்டி, நாளை திரைக்கு வரவுள்ளது.

இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரையரங்குகளில் பேனர்களும், கட் அவுட்களும் குவிந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே படத்திற்கான முன்பதிவு தொடங்கி, பல திரையரங்குகள் முழுவதும் நிரம்பியுள்ளன.

இந்நிலையில் தாம்பரத்தில் உள்ள வித்யா தியேட்டரில் விஸ்வாசம் படத்திற்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு வந்த ஒரு ரசிகருக்கு முதல் நாள், முதல் காட்சிக்கான டிக்கெட் கிடைக்கவில்லை.

#Viswasam FDFS டிக்கெட் கிடைக்காத விரக்தியில் பணத்தை கிழித்து எறிந்த ரசிகர்
இதனால் விரக்தியில் 600க்கான ரூபாய் தாள்களை கிழித்து எறிந்துள்ளார். இதையடுத்து ‘தலக்காக’ என்று கத்தி விட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார். இதனை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*