தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம்!

மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று காலை முதல் நூற்றுக்கணக்கானோர் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து சென்றனர்.

மறுபுறம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சி.இ.ஓ அலுவலகத்தில் இருந்து வந்த தகவலின்படி, இன்று மதியம் வரை நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அவற்றை ஒழுங்குபடுத்தி கணக்கிட வேண்டும். கடந்த வாரம் செவ்வாய் கிழமை முதல் போராட்டம் காரணமாக, ஏராளமான ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் ரூ.10,000 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்தது.

இதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முதலில் மாலை வரை அரசு காத்திருக்கும் என்றும், அதன்பிறகு ஆசிரியர்கள் பணிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் தகவல் பரவியது.

இதனால் சி.இ.ஓ அலுவலகம் வந்த மக்கள் விண்ணப்பங்கள் பெற்று, அதை சமர்பிக்காமல் இருந்தனர். ஆனால் அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கியதும், கூட்டமாக தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளித்து விட்டுச் சென்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*