உண்மையில் ரஜினியின் பேட்டையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்!

சென்னை: விஸ்வாசம் படத்துக்கு போட்டியாக களமிறங்கி, ரஜினியின் பேட்ட படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மரண அடி வாங்கியுள்ளது.

பொங்கல் திருநாளை ஒட்டி, ரஜினிகாந்தின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் திரைக்கு வந்துள்ளன. ரஜினியின் வெறித்தனமான ரசிகனாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், ரஜினி ரசிகர்களுக்காக படைத்த விருந்து தான் ‘பேட்ட’ திரைப்படம்.

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்காக…..
முழுக்க முழுக்க ரஜினியின் ஸ்டைல், அசத்தல் நடிப்பில் வெறித்தனமான கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் விஸ்வாசம். ரிலீஸான முதல் நாளிலேயே தமிழகத்தில் ரஜினியின் பேட்ட படத்தை வசூலில் முந்தியது. இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. தமிழ் ராக்கர்ஸில் படம் கசிந்த போதும் தியேட்டர்களுக்கு செல்லும் மக்கள் கூட்டம் குறையவில்லை.

உலகளவில் ஓ.கே….
இந்நிலையில் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் விஸ்வாசம் படம் நல்ல வசூலை செய்த போதும், தமிழகத்தில் ‘ஓப்பனிங் கிங்’அந்தஸ்தை கோட்டைவிட்டுள்ளார் ரஜினி. இதற்கு முன்னதாக அக்டோபர் 25, 1992ல் கமலின் தேவர் மகன், ரஜினியின் பாண்டியன் படங்கள் ஒன்றாக வெளிவந்தன.

27 ஆண்டுகளுக்கு பின்….
அப்போது தேவர் மகன் படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால், பாண்டியன் படம் முதல் நாள் வசூலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதையடுத்து வசூல் மன்னனாக ரஜினியே தொடர்ந்து நீடித்து வந்தார். இந்நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது விஸ்வாசம் படத்தின் முதல் நாள் வசூலால், ரஜினியின் ‘பேட்ட’ படம் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

போட்டி போட்டு…..
இந்நிலையில் குறைந்த இடைவேளையில் ரஜினியின் 2.0, வெளியானதால், பேட்ட படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதில் ரஜினிக்கு விருப்பம் இல்லாத போதும், படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விஸ்வாசம் படம் ரிலீஸான 3 நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. முதல் முறையாக சென்னை பாக்ஸ் ஆபீஸில் விஸ்வாசம் நேற்று ஒரே நாளில் ரூ. 1.04 கோடி வசூல் செய்துள்ளது.
அமெரிக்காவிலும் விஸ்வாசம் ரூ. 1 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சிங்கப்பூரில் ரூ. 1.48 கோடி வசூலித்துள்ளது.

Viswasam Ajith பொங்கல் விடுமுறை வருவதால், ’விஸ்வாசம்’ படம் வசூலில் புதிய உச்சங்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்காக ரிலீஸ் செய்து, தமிழகத்தில் பேட்ட படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பேட்ட படத்தை அஜித்தின் விஸ்வாசம் உண்மையில் அந்தரத்தில் அடிச்சு தூக்கியுள்ளது என்பது மறுப்பதற்கு இல்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*