ஹன்ஷிகாவை தொடர்ந்து இறைவி பட ஹீரோயினுக்கு நேர்ந்த கொடுமை!

இறைவி படத்தின் கதாநாயகி பூஜா தேவரியா, தனது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ’இறைவி’ படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர் பூஜா தேவரியா. இதைத்தொடர்ந்து ’குற்றமே தண்டனை’ படத்தில் தனது தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தியவர் பூஜா.

தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், நவீன நாடகத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் பூஜா. மேலும் சமீபத்தில் தெலுங்கில் வெளியான திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

If you have my phone number, please block it. My number was hacked at 10am this morning. Some cheapo is using my Wh… https://t.co/hbKGeQwOVb— Pooja Devariya (@iamrascalpapa) 1550587569000
இந்நிலையில் நடிகை பூஜா தேவரியா தனது செல்போனை யாரோ ஹாக் செய்துவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது ‘ எனது செல்போன் எண் யாரிடமாவது இருந்தால் பிளாக் செய்யுங்கள். இன்று காலை 10 மணிக்கு எனது செல்போன் ஹேக் செய்யப்பட்டது. ஹேக் செய்தவர்கள் எனது வாட்ஸ் ஆப்யை பயன்படுத்தி எனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தொடர்ந்து குறுச்செய்தி அனுப்புகின்றனர். தயவு செய்து அதற்கு யாரும் பதிலனுப்ப வேண்டாம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை ஹன்ஷிகா,அக்‌ஷராஹாசன் போன்றவர்களின் செல்போன்களும் இதுபோன்று ஹாக் செய்யப்பட்டது என்பது கூறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*