அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டீங்களா? வைரலாகும் ஆர்யா-சாயிஷா லேட்டஸ்ட் போட்டோ!

சென்னை: நடிகர் ஆர்யா, சாயிஷா வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. வருடத்திற்கு ஓரிரு படங்களில் மட்டும் நடித்து அதனை வெளியிட்டு வருகிறார். இவரது நடிப்பில் வந்த ராஜா ராணி என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் அமையவில்லை.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் தற்போது ஆர்யாவின் திருமணம் உறுதியாகியுள்ளது. கஜினிகாந்த் படத்தில் நடித்த போது அதில் ஜோடியாக நடித்த சாயிஷாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Arya Sayesha இந்நிலையில், காதலர் தினத்தன்று தங்களின் திருமணத்தை நடிகர் ஆர்யா, சாயிஷா டுவிட்டர் மூலம் அறிவிப்பை வெளியிட்டனர். அதில், வரும் மார்ச் மாதத்தில் சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக தெரிவித்திருந்தனர்.

Happy Valentines Day �� #Blessed �� @sayyeshaa https://t.co/WjRgOGssZr— Arya (@arya_offl) 1550123476000 ஆனால், திருமணம் தேதியை அறிவிக்கவில்லை. விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் வைத்து ஆர்யா – சாயிஷா திருமணம் நடக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய முறைப்படி நடைபெறும் இந்த திருமணம் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.

Arya Sayesha 1 இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகம் திரண்டு வந்து வாழ்த்து கூறும் என்பதால், பிரமாண்டமான திருவிழாவாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் ஆர்யா, சாயிஷா ஆகியோர் சூர்யா, மோகன்லால் நடிக்கும் காப்பான் படித்தில் நடித்துவருகின்றனர். இவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *