அஜித் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னதும் இப்படியா? – நெகிழும் பிரபல நடிகர்

அஜித்தின் விஸ்வாசம் தான் இந்த வருடத்தின் முதல் வெற்றி படம். அடுத்தடுத்து நிறைய லாபம் கொடுக்கும் படங்கள் வரும் ஆனால் ஆரம்பத்தில் ஹிட் கொடுத்த படத்தை யாரும் மறக்க மாட்டார்கள். தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் அஜித் இப்போது ஒரு ரீமேக் படம் நடிக்கிறார். இன்றிலிருந்து புதிய பட படப்பிடிப்பில் அஜித் இணைகிறார் என்று கூறுகின்றனர். படத்தில் ஒரு அப்பா வேடத்தில் நடிக்கிறார் டெல்லி கணேஷ். அவர் ஒரு பேட்டியில், ஹிந்தியில் நான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை, தமிழில் மாற்றுவார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன், அஜித் படம் கூட. இப்படத்தில் நான் நடிக்கிறேன் என்றதும் நிறைய போன் கால்கள், கனடா, மலேசியா என வருகிறது, அஜித்தை பார்க்க வேண்டும் என போன் வந்ததால் அவர் கூறியுள்ளார்.