கட்டுக்கடங்காத கூட்டத்தால் திணறிய டிடிவி தினகரன்!

கட்டுக்கடங்காத கூட்டத்தால் திணறிய தினகரன்… விழுப்புரம் தொண்டர்கள் கொடுத்த செம்ம வரவேற்பு!!

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நாடத்தப்படுவதைப்போலவே, தினகரன் தனது அம்மா மக்கள் முன்னேற்றக கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் தொடங்கியுள்ள அவருக்கு போகும் இடமெல்லாம் பலத்த வரவேற்பு.

சசிகலா ஜெயிலுக்கு போனதால் அவரது அக்கா மகன் தினகரனை கழட்டி விட்டுவிட்டு, எடப்பாடியும் ஓபிஎஸ்சும் ஒன்றாக இணைந்ததை அடுத்து, தனக்கென ஒரு அணியை வைத்து RKநகரில் சுயேச்சையாக நின்ற டிடிவி தினகரன் வென்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்த நாள் முதல் பரபரப்பாக அரசியலில் இயங்கி வருகிறார்.

இந்நிலையில், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நாடத்தப்படுவதைப்போலவே, தினகரன் தனது அம்மா மக்கள் முன்னேற்றக கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் தொடங்கியுள்ளார்.

டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் ‘மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், முதற்கட்டமாக பிப்ரவரி 2ம் தேதி முதல் திருவிடைமருதூர், குடந்தை, பாபநாசம் திருவையாறு தொகுதிகளில் தனது சுற்றுப்பயணத்தை தினகரன் வெற்றிகரமாக முடித்தார். அடுத்ததாக திருப்பூர் பகுதிகளில் சுற்றுப்பயணத்தையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அந்த பயணத்தையும் நிறைவு செய்த தினகரன்,

இதனையடுத்து, திருச்சி தெற்கு மாவட்டத்தில் தினகரனுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர் தொகுதி என மக்கள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நடுவே வாகனத்தில் மிதந்து சென்றார் தினகரன். விழுப்புரம் தொண்டர்கள் கொடுத்த பிரமாண்ட வரவேற்பால் தினகரன் குஷியில் உள்ளாராம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*