நயன்தாரா குறித்து செக்ஸியாக, அறுவெறுக்கத்தக்க கருத்து தெரிவித்த ராதாரவி!

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா உள்ளிட்டோர், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதி காலம்’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 23) நடைப்பெற்றது. இந்த படம் பல காலமாக தயாரிப்பில் கிடப்பில் கிடந்தது.

கொலையுதி காலம் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார்.

விழாவில் பேசிய ராதாரவி, “நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. ஆனால் அவர் குறித்து வராத செய்திகளே இல்லை. அவர் பேயாகவும் நடிக்கிறார், சீதாவாகவும் நடிக்கிறார். ஏனென்றால் தமிழ் நாட்டு மக்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் மறந்து விடுகிறார்கள்.

முன்பெல்லாம் சாமி வேடம் போட கே.ஆர். விஜயாவை கூப்பிடுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை யாரை வேண்டுமானாலும் நடிக்கிறார்கள். அவர்கள் கும்பிடும் படியாவும் இருக்கிறார்கள், பலர் கூப்பிடும் படியாகவும் இருக்கிறார். ஏனென்றால் நிலைமை அப்படி போய்விட்டது.” என அறுவெறுக்காத்தக்க வகையில் விழாவில் ராதாரவி பேசி உள்ளார்.

நயன்தாராவை இழிவுபடுத்திய ராதாரவி… அண்ணன் என்றும் பாராமல் விளாசிய ராதிகா

Radha Ravi: என் செல்லாக்குடியவா அசிங்கமா பேசுர… ராதாரவியை லெஃப்ட் ரைட் வாங்கிய விக்னேஷ் சிவன்

சின்மயி கண்டனம்:
இப்படி பேசு பவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

ஆனால் ராதாரவி விழா மேடையிலேயே பலர் முன்னர் முன்னனி நடிகையை இழிவாக பேசிஉள்ளார். இவரை கண்டிக்க யார் இருக்கிறார்கள் என சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*