மோடிக்கு தலைவணங்காத ஒரே கட்சி அமமுகதான் – டிடிவி தினகரன்

பிரதமர் மோடிக்கு தலைவணங்காத ஒரே கட்சி அமமுகதான் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசினார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அமமுகவின் வேட்பாளர் வ.து.ந.ஆனந்த், பரமக்குடி சட்டப் பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர் எஸ்.முத்தையா ஆகியோரை ஆதரி த்து பரமக்குடி யில் டிடிவி தினகரன் பேசியதாவது:

பழனிசாமியை முதல்வர் ஆக்கியதற்காக எம்எல்ஏ பதவியை முத்தையா இழந்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் திமுகவுடன் சேர்ந்து ஓ.பன்னீர் செல்வம் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தார். ஆனால் முத்தையா பழனிசாமிக்கு வாக்களித்தார். துரோகத்துக்கு எடுத்துக்காட்டு பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தான்.

மதச்சார்பற்ற கூட்டணி என மு.க.ஸ்டாலின் நாட்டை ஏமாற்றுகிறார். நான் இந்துக்களுக்கு எதிரியல்ல என்கிறார். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவதுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரது ஆட்சியை குறை சொல்லாமல், தி.க. தலைவர் வீரமணி கிருஷ்ணரை குறை கூறுகிறார்.

அரசியல்வாதிகள் சாதி,மதத்தைப் பற்றி பேசக்கூடாது. சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அமமுக. அதிமுக, பாஜக சந்தர்ப்பவாதக் கூட்டணி. அதிமுகவினர் பண மூட்டையை நம்பி தேர்தலை சந்திக்கின்றனர். நாங்கள் மக்களை நம்பியுள்ளோம். பிரதமர் மோடிக்கு தலைவணங்காத ஒரே கட்சி அமமுக. நாங்கள் மக்களுக்காக மட்டும் தலைவணங்குவோம். எங்கள் கட்சி வெற்றி பெற்றால் பரமக்குடியில் அரசு பொறியியல் கல்லூரி, பாதாளச் சாக்கடை திட்டம், பருத்தியை பிரித்தெடுக்க ஆலை, நெசவாளர் குழந்தைகளுக்கு தனிப் பள்ளிக்கூடம், தொழிலாளர் நல மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவோம் என்றார்.

முதுகுளத்தூரில் பேசும்போது, நமது ஆட்சி வந்ததும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவ மகளிருக்கு உலகத்தரம் வாய்ந்த கடற்பாசி தொழில் செய்யவும், மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்கவும் மானிய திட்டங்கள் கொண்டு வரப்படும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*