காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று தமிழகம் வருகிறார்

தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.
தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் சேலம், தேனி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். மேலும் அவர் மதசார்பற்ற ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். ராகுலின் பிரச்சாரம் மக்களவை தேர்தல் வெற்றிக்கு அடிதளமாக அமையும் என காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*