இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் படத்தின் புதிய அப்டேட்

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 19 – வது படைப்பாக “வானம் கொட்டட்டும்” என்ற புதிய படம் உருவாக இருக்கிறது. இதில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள். மணிரத்னத்தின் உதவியாளரான இவர் ஏற்கனவே “படை வீரன்” என்ற படத்தை இயக்கியுள்ளார். அனைவராலும் பாராட்டு பெற்ற இவர் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். “96” புகழ் கோவிந்த வசந்தா இசை அமைக்கிறார். பிரீத்தா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்குகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*