தங்கை படிப்புக்காக பிரேக் விட்ட ‘கருவாப்பையா’ நடிகை.. மீண்டும் நடிக்க வருகிறார்!

தூத்துக்குடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்த, நடிகை கருவாப்பையா கார்த்திகா மீண்டும் நடிக்க வருகிறார்.தூத்துக்குடி படத்தில் நாயகியாக நடித்து கருவாப்பையா கருவாப்பையா என்ற பாடல் மூலம் பிரபலமானவர் நடிகை கார்த்திகா. தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரைசம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.பின்னர் தனது தங்கையின் படிப்பிற்கு உதவியாக இருப்பதற்காக சிறிது காலம் மும்பையில் தங்கியிருந்தார் கார்த்திகா.விஜய் சேதுபதி இன்னொரு சிவாஜியாம்: சேரன் சொல்வது சரியா? இந்நிலையில், தங்கையின் படிப்பு முடிந்து சில தினங்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினார் அவர். பின்னர் வடபழனியில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்துகொண்ட ரசிகர்கள், நீங்க கருவாப்பையா கார்த்திகா தானே எனக் கேட்டு அவரை சூழ்ந்துகொண்டனர். தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தயாராகிவிட்டார். பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தபோதும், திரைப்படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம். இதனால் மீண்டும் கார்த்திகாவை திரைப்படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் பேசி வருகிறார்கள். நல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்க தயாராக உள்ளதாக கூறுகிறார் கார்த்திகா. சமீபகாலமாக பல முன்னாள் நடிகைகள் மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி ஆகி வருகின்றனர். அந்த வரிசையில் விரைவில் கார்த்திகாவும் இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர் நடிக்கும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Actress Karuvapaiyah Karthiga is back again for acting in films. She is very clear that she will act only in films.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*