ஸ்டாலின் மருமகன் ஆர்.எஸ்.எஸ் தலைவருடன் ரகசிய சந்திப்பு! டி.டி.வி.யை விட்டுக்கொடுக்காத இஸ்லாமிய அமைப்பு..!

அரசியலுக்காக ஸ்டாலின் மருமகன் சபரி ஆர்எஸ்எஸ் முக்கிய நிர்வாகி ஒருவரை ரகசியமாக சந்தித்ததாக தமிழ்நாடு முஸ்லீம் லீக்கின் மாநில தலைவர் முஸ்தபா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அவர், ”வரும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு முழுமையான ஆதரவு. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் சிறுபான்மையினரை நம்ப வைத்து துரோகம் செய்துள்ளது. மக்களுக்கு எதிரான பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. ஆகவே நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆதரிக்கிறோம்.

மேலும் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. தேனியில் ஓபிஎஸ் மகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அங்கு பண மழை கொட்டுகிறது. இதேபோன்ற முறைகேடுகளை புகாராக தந்தாலும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் செயல்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து சிறுபான்மை மக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக கூறி வருகிறார். ஆனால் அவ்வாறு சிறுபான்மை மக்களின் வாக்குகள் முழுவதும் அவர்களுக்கு கிடைக்காது.

இஸ்லாமிய மக்களை சுட்டுகொன்றது திமுக ஆட்சியில் தான். இஸ்லாமியர்கள் குல்லா அணிந்து தாடி வைத்தவர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்ததும் திமுக ஆட்சியில் தான். அவர்கள் பாஜகவை போல் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக ஸ்டாலின் மருமகன் சபரி ஆர்எஸ்எஸ் முக்கிய நிர்வாகி ஒருவரை ரகசியமாக சந்தித்தார். இதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. அதிமுக பாஜக ஏ அணியாகவும், திமுக பாஜகவின் பி அணியாகவும் செயல்படுவதாக கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*