திமுகவின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது: டிடிவி தடாலடி பேச்சு!

கருணாநிதியின் மறைவுக்குபின் திமுகவின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது; அதனால்தான் அவர்கள் தேர்தலில் கூட்டணி வைத்துள்ளனர் என்று, கடலூரில் இன்று அமமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலுக்கு சாதி, மதம் தேவையில்லை; யாருடைய சாதியையும் மதத்தையும் புண்படுத்தக்கூடாது என்றும் அப்போது அவர் தெரிவித்தார். முன்னதாக புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட தினகரன், புதுச்சேரியின் இரண்டு சாமிகளையும் நம்பவேண்டாம் என நாராயணசாமி, ரங்கசாமி ஆகிய இருவரை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*