ஸ்டாலின் போல் மிமிக்ரி செய்த டிடிவி! பிரச்சாரத்தில் கலகல!

தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் தலைவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்லி பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில், முருகேசன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து டிடிவி தினகரன் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

“திமுக சிறுபான்மையினரின் காவலர்கள் என்று ஏமாற்றியது எடுபடவில்லை. என்றவுடன் இப்போது நாங்கள் இந்துக்களின் எதிரி அல்ல எனக் கூறி வாக்குக் கேட்டு வருகின்றனர்.

எங்கள் குடும்பத்தில் அனைவரும் கோயிலுக்கு செல்வார்கள் என்று கூறுகிறார்கள். இது என்ன பெரிய சாதனையா? பாஜகவைப் போல நீங்களும் மதத்தைப் பற்றிதான் பேசுகிறீர்கள். நீங்கள்தான் பாஜகவின் தமிழகத்தின் பி டீம்.” எனப் பேசினார்.

பேசி முடித்துவிட்டு மீண்டும் “நாங்கள் இந்துக்களின் எதிரி அல்ல” என ஸ்டாலின் பேசுவது போல பேசிக்காட்டினார். இதைப்பார்த்த தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து தினகரனின் பேச்சை ரசித்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*