தஞ்சாவூரில் தரமான சம்பவம் அலறும் அதிமுக! திகிலில் திமுக!

தஞ்சாவூரில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முருகேசன், சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரெங்கசாமி ஆகியோரை ஆதரித்து துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் செய்தார். அங்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மரண பீதியில் இருக்கிறதாம்.

தஞ்சாவூரில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முருகேசன், சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரெங்கசாமி ஆகியோரை ஆதரித்து கீழவாசல் பகுதியில் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் செய்தார். அங்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மரண பீதியில் இருக்கிறதாம்.

தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதே போல் திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்த இரு முக்கிய கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் இறங்கியுள்ள நிலையில் அமமுக கூட்டணியில்லாமல் தனியே கெத்தாக களம் இறங்கியிருக்கிறது. தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தினகரனுக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து அதிமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அதிமுக ஓட்டுகளை அப்படியே பாதியாக பிரித்துவிடுவார் என்ற அச்சத்தில் உள்ளனர்.

தினகரனின் இந்த பிரசாரத்திற்கு சொந்த மண்ணான தஞ்சாவூரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் தஞ்சையே கதிகலங்கிப் போயிருக்கிறது. அதுமட்டுமா சுற்றியுள்ள வீட்டின் மொட்டை மாடிகளில் நூற்றுக்கணக்கானோர் நின்றுகொண்டு பார்த்துள்ளனர். தஞ்சையே மிரண்டு போகும் அளவுக்கு கூடிய மக்கள் கூட்டத்தை அமமுக கட்சியினரே எதிர்பர்க்கவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுகமற்றும் திமுக கட்சியினர் இந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*