பிக்பாஸ் 3 -ல் கலந்துகொள்ள மறுத்த நடிகை – காரணம் இதுவா?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி வாய்ப்பை மறுத்துள்ளார் நடிகை ஆனந்தி.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜுன் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் இரண்டு புரமோ வீடியோக்களை தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பார்வையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தமுறை பங்கேற்கப்போவது யார் யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.அந்தவகையில் ஜாங்கிரி மதுமிதா, எம்.எஸ்.பாஸ்கர், சாக்‌ஷி அகர்வால் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டுள்ளன.

ஆனால் இதை நிகழ்ச்சிக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேவேளையில் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர், நடிகைகளிடம் தொலைக்காட்சி நிர்வாகம் மும்முரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘கிச்சன் சூப்பர்ஸ்டார்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும், வாலு’, ‘மீகாமன்’, ‘தாரை தப்பட்டை’, ‘பறந்து செல்ல வா’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ள ஆனந்தியிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது தொலைக்காட்சி நிர்வாகம். ஆனால் தனக்கு வந்த வாய்ப்புக்கு ஆனந்தி ‘நோ’ சொல்லியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது மகனை விட்டு பிரிந்திருக்க முடியாத காரணத்தால் அவர் இந்த வாய்ப்பை மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த சீசனில் பங்கேற்ற நடிகை விஜயலட்சுமி, நிகழ்ச்சிக்காக தனது மகனை பிரிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*