கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கும்? பள்ளிக் கல்வித் துறை தகவல்


சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற தகவலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் அன்றைய தினமே மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விலையில்லா பாடநூல்கள் தங்களது தேவை பட்டியலின் படி பெறப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளவும், 2,3,4,5,7,8,10,12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட நூல்களை 2019 – 20 ம் கல்வியாண்டில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.
n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*