‘தோனி’ என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்! வைரலாகும் வீடியோ

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பவுண்டரி எல்லைக்கு அருகே ஃப்ல்டிங் செய்த தோனியை பார்த்து ரசிகர்கள் ஆரவார கூச்சலிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் 45 லீக், 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் அனைத்து அணிகளும் 2 பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க உள்ளது. முதல்பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய அணி சார்பில் ஜடேஜா 54 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை எளிதாக வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்தி விக்கெட் கீப்பராக செயல்பட்டார். சிறிது நேரம் ஓய்வெடுத்த தோனி பின் பவுண்டரி எல்லை கோட்டுக்கு அருகே பீல்டிங் செய்தார். இந்திய அணிக்காக ஆரம்ப காலத்தில் ஃபில்டிங் செய்த தோனி பல ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் ஃப்லிடிங் செய்துள்ளார்.

தோனி பவுண்டரிக்கு அருகே ஃபில்டிங் செய்த போது ஓவல் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி, தோனி என்று ஆரவார கூச்சல் எழுப்பினர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *