#Comali4thLook: விஜய்சேதுபதி வெளியிட்ட கோமாளி 4-வது போஸ்டர்!

ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் 4-வது போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய்சேதுபதி.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் கோமாளி. ஜெயம் ரவியின் 24-வது படமாக இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாஷி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார். தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

படத்தை பிரபலப்படுத்தும் விதமாக தினமும் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது.

ஏற்கனவே மூன்று போஸ்டர் வெளியான நிலையில் தற்போது 4-வது போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*