உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியானது: இந்தியாவை எதிர்கொள்ளப் போவது யார்?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.

2019 உலகக் கோப்பை தொடரில் புள்ளிப்பட்டியல் அடிப்படையில் 8 அணிகள் நேரடியாகவும் மேற்கு இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் போட்டி ஆட்டங்களில் வெற்றி பெற்றும் தேர்வு செய்யப்பட்டது.10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை எதிர்கொள்ள வேண்டும். முதல் போட்டியில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

Also Watch :வைரல் வீடியோ: தல தோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்து பிரபலமான இங்கிலாந்து வீரர்!

உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் வரும் 22-ம் தேதி இங்கிலாந்து புறப்பட உள்ளனர்.

உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. மே 25-ம் தேதி நியூசிலாந்தையும், மே 28-ம் தேதி வங்கதேசத்தையும் இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.

போட்டி அட்டவணை: மே 24: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்
இலங்கை vs தென் ஆப்ரிக்கா

மே 25: இங்கிலாந்துvs ஆஸ்திரேலியா
இந்தியா vs நியூசிலாந்து

மே 26: தென் ஆப்ரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ்
பாகிஸ்தான்vs வங்கதேசம்

மே 27: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலியா vs இலங்கை

மே 28: இந்தியாvs வங்கதேசம்
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*