சந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு

சென்னை : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.சந்திரபாபு நாயுடு விஜயவாடா விமான நிலையம் வந்த போது, பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பு கான்வாயையும் அனுமதிக்கவில்லை என்றும் சக பயணிகளுடன் பேருந்தில் ஏற்றப்பட்டு விமானத்தில் ஏற வைத்ததாகவும் தெலுங்கு தேசம் கட்சியினர் கூறியுள்ளனர்.ஏற்கெனவே, சந்திரபாபு நாயுடுவை கொலைசெய்ய நக்சலைட்டுகள் முயற்சி செய்துள்ளனர். இந்த நிலையில் அவர் பாதுகாப்பில் சமரசம் செய்வதை ஏற்க முடியாது என்றும் தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*