கீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு!

கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையைக் குறைத்த பின்னர் நோயாளி போல் மாறிவிட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

srireddy-1-1.jpg

தெலுங்கு பட உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அரை நிர்வாணப் போராட்டத்திலும் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.சமீபத்தில் விஷால் குறித்து பரபரப்பு குற்றச்சாடுகளை முன்வைத்திருந்த ஸ்ரீரெட்டி, தற்போது கீர்த்தி சுரேஷை தனது ஃபேஸ்புக்கில் விமர்சித்துள்ளார். அந்தப் பதிவில், நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் பயணித்தோம். நான் உட்பட யாராலும் கீர்த்தி சுரேஷை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. என்னிடம் பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையைக் குறைத்ததற்குப் பின்னர் நோயாளி போல் இருக்கிறார். அவர் நடித்த மகாநடி படம் இயக்குநரால் மட்டுமே சிறப்பாக வந்தது. கீர்த்தி சுரேஷின் திறமையால் அல்ல. தற்போது சாய் பல்லவி மிகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

keerthi.jpg

இந்தப் பதிவைப் பார்த்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள், ஸ்ரீரெட்டியை கமெண்டில் வசைபாடி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*