எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு


திருப்பரங்குன்றம் : தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஊராட்சி சாலை மாநில சாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று சர்வே பணிகள் துவங்கியது.இங்கு 224.24ஏக்கரில் 1264 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. விரைவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்க உள்ளது.கூத்தியார்குண்டு விலக்கிலிருந்து கரடிக்கல் செல்வதற்கு 5 மீட்டர் அகலத்தில் ஊராட்சி சாலை உள்ளது. இச்சாலை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஒட்டிசெல்கிறது. அந்த சாலையை 21.2 மீட்டர் அகலத்தில் விரிவுபடுத்தப்படுத்தி 2 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.திருப்பரங்குன்றம் எல்லை வரை 21.2 மீட்டர் அகலத்திற்கும், திருமங்கலம் தாலுகா எல்லையிலிருந்து செக்கானுாரணி- திருமங்கலம் சாலை வரை 10 மீட்டர் அகலப்படுத்தி இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஊராட்சிவசம் இருந்த அந்த சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.நேற்று அந்த சாலையை சர்வே செய்யும் பணி துவங்கியது.
n தாசில்தார் நாகராஜன், வி.ஏ.ஓ., தேவராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர்ராஜபாண்டி முன்னிலையில் தாலுகா துணை சர்வேயர்கள் ராஜ்குமார், ரகுபதி, நில அளவையர் சித்ரா அளவீடு செய்தனர்.